நிதி நெருக்கடியிருந்தாலும் இதழியல் டிப்ளோமாப் பயிற்சி நடைபெறும் - பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்

பாறுக் ஷிஹான்-
நிதி நெருக்கடிகளை சந்தித்தாலும் மாணவர்களுக்காக பயிற்சிக்கட்டணங்களை அதிகரிப்பதனூடாக டிப்ளோமாப்பயிற்சியை தொடர்ச்சியாக நடத்துவோம்' இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம். 

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையத்தில் இதழில் டிப்ளோமாப்பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 19.11.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. திரு தே.தேவானந்த் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்க்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு டிப்ளோமாப்பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

அதன்போதே மேற்சொன்ன கருத்தை முன்வைத்தார். 

'கடந்த காலங்களில் நோர்வே அரசினுடைய உதவியுடன் சிறப்பாக நடைபெற்ற டிப்ளோமாப்பயிற்சி அவர்களின் நிதி முடிவடைந்த காரணத்தால் தொடர்ச்சியாக நடத்தமுடியாது தடைப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தப் பயிற்சியை பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடத்தும். பயிற்சிக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதே வேளை எதிர்காலத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பட்டப்படிப்பை மேற்கொள்ளவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்' என்றும் தெரிவித்தார்.

'ஈழத் தமிழ் இதழியல் வரலாற்றில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்திற்கு தனித்துவமான அடையாளம் உண்டு

தேசிய ஊடகங்களிலும் பிராந்திய ஊடகங்களிலும் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பணியாற்றுகிறார்கள். சமூகவலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக டிப்ளோமா மாணவர்கள்; சொந்தமாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் உருவாக்கி நடத்துகின்றார்கள். இதுவரையில் 125 மாணவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து பயிற்சி பெற்று வெளியேறியுள்ளார்கள். அவர்களில் 75 வீதமானவர்கள் பத்திரிகைத்துறையில் பணியாற்றுகிறார்கள். இவை இந்த நிறுவனத்தின் பேறு என்று குறிப்பிடலாம்' என்று ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்த் தெரிவிதத்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு ராஜவிசாகன், ஊடகக்கற்கைகள் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி சுதாகர் மற்றும் பரீட்சைகள் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் க. ஞானபாஸ்கரன் ஆகியோரும் ஊடகவியலாலர்கள் பொதுமக்கள் என்ப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -