திருகோணமலை மாவட்டத்தின், கப்பல்த்துறை முத்து நகர் மற்றும் விளாங்குளம் பகுதிக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ்விடங்களை பார்வையிடுவதற்காக 31.10.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வருடன், திருகோணமலை மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் திரு. முஸாஜித் மற்றும் பிராந்திய பொறியியலாளர் திரு. சதீஸ் ஆகியோர் இரு பகுதிகளையும் பார்வையிட்டனர்.
பிரதான வீதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் வரையான முத்து நகர் கிராம பகுதிக்கும், விளாங்குளம் பகுதிக்கான 3 கிலோமீட்டர் வரையான பகுதிக்கும் குழாய்கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கான வேலைத்திட்டங்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.