எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் திருகோணமலை ,மூதூர் போன்ற பகுதிகளில் மூன்று நாட்களாக மாழையில் பெய்த கடும் அடை மழை காரணமாக அப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.திருகோணமலை,கந்தளாய் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் பரவி காணப்படுகின்றது.
நேற்றைய (6) தினம் மாலை வேளையில் பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளது. இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய், பரவிபாஞ்சான்,கல்மெட்டியாவ மற்றும் சீனிஆலை குளங்களின் நீர் மட்டமும் உயர்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையினால் நகரில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை நகரின் அலஸ்தோட்டம்,உப்புவெளி போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் மூன்று அடிக்குமேல் காணப்படுகின்றது.