மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

நசீஹா ஹஸன் -

மா
வனல்லை ஸாஹிராக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம். ஜவாட் (நளீமி) தலைமையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள முன்னணி தமிழ் மொழி மூல பாடசாலையான ஸாஹிராக் கல்லூரி, கல்வியில் மாத்திரமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் அதிகளவு முக்கியத்துவம் வழங்குகின்றது. அதற்கமைய மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கல்லூரியின் புதிய அதிபர் எம்.எம். ஜவார் அவர்களின் வழிகாட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தரம் 6-9 மற்றும் தரம் 10-13 என இரண்டு பிரிவுகளாக மேற்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தரம் 6-9 பிரிவில் 80 மாணவ வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் அதில் 40 மாணவர்களும், தரம் 10-13 பிரிவில் 100 மாணவ வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் அதில் 80 மாணவர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -