எம்.ரீ. ஹைதர் அலி-
துருக்கி குடியரசின் சமூக நல அமைப்பான Deniz Feneri அனுசரணையுடன் SFRD (Serendib Foundation for Relief and Development) யினால் கட்டப்பட்ட காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கான இரண்டு இரு மாடி கட்டடங்கள் மற்றும் அதற்கான தளபாடங்களையும் கையளிக்கும் நிகழ்வு 2016.11.20ஆந்திகதி இன்று காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் (அநாதை இல்லம்) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக துருக்கிய நன்கொடையாளர்களான Mr. Sadi Bozkurt, Mr. Ahmet Akdogan, Mr. Mehmet Yavuz ஆகியோர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்து கொண்டு கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை கையளித்து வைத்தனர்.
மேலும் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலுள்ள பிள்ளைகளுக்கு துருக்கிய நன்கொடையாளர்களால் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதோடு, துருக்கிய நன்கொடையாளர்கள் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.