ஷபீக் ஹுஸைன்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக கடமையாற்றிய ஏ.எச்.ஏ. பஷீர் அவர்களின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் இன்று (14) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹமீட் ஆகியோரால் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ. பஷீர் கெளரவிக்கப்பட்டார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநதிகள், பாடைசாலையின் பழைய மாணவர்கள் உட்பட ஏராழமானவர்கள் கலந்துகொண்டனர்.