வரவு செலவுத்திட்டம்: ஹரீஸின் தொகுதிக்கு கிடைத்தவை பற்றி உரை..!!

நாட்டின் தற்கால சூழ்நிலைக்கேற்ப அரசாங்கம் யதார்த்தமான ஒரு வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இதில் நாட்டின் உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்ற கடன் தொகையினையும் உள்நாட்டு செலவீனங்களையும் குறைத்து மக்களுடைய நலனையும், நாட்டின் தேசிய அபிவிருத்தியையும் மையமாக வைத்து இந்த வரவு செலவுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வரவு செலவுத்திட்டத்தின் விஷேட அம்சம்மாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதனை ஆதரித்திருப்பதாகும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.



இதன்போது வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்.

இவ்வரவு செலவுத்திட்டத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தகாலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஹெடஓயா நீரப்பாசனத்திட்டத்தை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இவ் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பொத்துவில் பிரதேச மக்களின் நீண்டகால குறையாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினை மற்றும் கோடைகாலங்களில் விவசாயம் மேற்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் தீர்கப்படவுள்ளதுடன் பொத்துவிலை அண்டிய பிரதேசங்களான பாணம, திருக்கோவில், ஆலையடிவேம்பு லஹுகல போன்ற பிரதேசங்களும் பயன்பெறவுள்ளன. அத்தோடு றவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சுக்கு 3000 இற்கும் மேற்பட்ட மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக வருகின்ற வருடத்தில் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை நாடுபூராகவும் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் கடந்த வருடத்தைவிட பெருமளவான நிதி இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 'திறமையினை அடையாளம் காணல்' என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 3 இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு விருத்தி செய்வதன் மூலம் சர்வதேச வெற்றிகளை பெறுவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அதேநேரம் நாடுபூராகவும் பல புதிய விளையாட்டு மைதானங்கள் அமைத்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அத்தோடு வடகிழக்கில் விளையாட்டுதுறை ஊடாக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விஷேட நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -