சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் சஞ்ஜீவனி இந்திரா ஜயசூரிய (02) காலமானார். இரு குழந்தைகளான தாயான இவர், புற்றுநோயால் அவதியுற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவி பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் புனித பிரிட்ஜட் கன்னிமடம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் இலண்டன் பிரட்பொர்ட் பல்கலையில் பொருளியல் கற்கைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததோடு, ஐக்கிய இராச்சியத்தில் (UK) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இந்திரா, அந்நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் டிக்கர் என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் பீடித்திருந்த இவர், கர்ப்பமுற்ற நிலையில் குழந்தையை குறை மாத நிலையில் சத்திரசிகிச்சை செய்து வெளியே எடுக்க மறுத்திருந்தார் என்பதோடு, தனது குழந்தை சரியான வளர்ச்சியோடு, தனது வயிற்றிலேயே பிறக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்ததாக, இலண்டன் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.