இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (03/11/2016) இறக்கமப் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இறக்காமப் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் ஆகியோர் இணைத்தலைமை ஏற்றனர். மேலும் இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள விவசாயம், கல்வி, சமயம், வீதி அபிவிருத்திகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இறக்கமப் பிரதேசத்தில் வைக்கப்பட்ட சிலை தொடர்பில் பல்வேறு விவாதங்களும் ஏற்பட்ட போது கிழக்கு மாகாண சபை எதிக்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கலால் உரிய விளக்கம் வழங்கப்பட்டு சுமுகமான முடிவுகள் எட்டப்பட்டது.