இன்றைய நல்லாட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா துறையடியில் புத்த சிலை வைப்பதற்கான நடவடிக்கைள் கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக அரங்கேறி இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் பெரிதும் அச்ச நிலைக்குள்ளாகியிருக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, சின்னம் பிள்ளைசேனை, வெள்ளைமணல், நாச்சிக்குடா கருமலையூற்று என் முஸ்லிம்கள் முழுமையாக வாழும் ஒரு பிரதேசம் இது. இப் பிரதேசத்தில் ஒரு சில பௌத்த குடும்பங்கள் கிண்ணியா துறையடியில் வசிக்கும நிலையில் இங்கு புத்த சிலை வைப்பதனூடாக முஸ்லிம்களின் பூர்வீகத்தை அவர்கள் முற்றாக சுரண்டுவதோடு நில உரிமையும் முழுமையாக பறிபோகின்றது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் உடனடியாக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க முன்வராதது கவலையளிப்பதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் மக்கள் கருத்து நிலவுகிறது.
அரசியலுக்கப்பால் எமது கலாசாரத்துடன் தொடர்புடைய கிண்ணியா வரவேற்பு கோபுரத்தை கட்டுவதற்கு காலம் சென்ற அமைச்சர் என்.கே.டீ.எஸ்.குணவர்த்தன உட்பட பலரும் தடையா இருந்ததையும் வரவேற்புக்கோபுரத்தின் தோற்றம் தற்போது மாற்றத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிகழ்வுகள் கிண்ணியா மண்ணில் நடந்தேறிக் கொண்டிருக்கையில் எப்படி எமது நிலப் பிரதேசத்தில் புத்த சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இது முஸ்லிம் பூர்வீக தேசத்திலிருந்து எம்மை விரட்டியடிப்பதற்கான பல நடவடிக்கைகளும் உரையாடல்களும் விளம்ப்பரப்பட்டுள்ள காலசூழலில் இவ்வாறான புத்த சிலை வைப்புக்கள் மக்கள் மத்தியில் பல முன்மொழிவுகளை எழுப்புகின்றன.
சமூக சிந்தனையாளர்கள், அரசியல் தலைமைகள், ஊடகவியளாலர்கள் எழுத்தாளர்கள் ,சட்டவல்லுனர்கள் கிண்ணியாவிலிருந்து என்ன பயன் இவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெற்றுக் கோஷங்களையாவது எழுப்பாதது ஏன் என கேள்விகள் எழும்புகின்றன.