எங்களை விட்டு பிரிந்த ஊடகவியலாளர் சகோதரர் பாயிஸ் மிகவும் எழிமையாக நம்மிடையே வாழந்த ஒருவராகும்.
அவர் கொழும்பைச் சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் கூட சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்ததுடன் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார்.
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒற்றுமை க்காகவும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சி க்காகவும் அதன் உயர்வுக்காகவும் மறைந்த சகோதரர் பாயிஸ் பாடுபட்டார்.
கடந்த 07.10.2016 அன்று சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனுடன் காத்தான்குடிக்கு சகோதரர் பாயிஸ் வருகை தந்தபோது காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் அவரை சந்தித்ததையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
சகோதர இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவை மர்ஹூம் பாயிஸ் பேணி வந்தார்.
இந் நிலையில் அவர் வபாத்தான செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரின் ஜனாஸா நல்லடக்கத்திலும், தொழுகையிலும் நாங்கள் கலந்து கொள்ள வருகை தரவிருந்த போதிலும் கிழக்கில் நிலவும் மழையுடன் கூடிய அசாதாரன கால நிலையினால் கலந்து கொள்ள முடியவில்லை.
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என பிராத்திப்பதுடன் எமது கவலையையும் அனுதாபத்தையும் அவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்.
தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள்
காத்தான்குடி மீடியா போரம்
காத்தான்குடி
19.11.2016