தமிழ் பாடசாலைக்கு சிங்களத்தில் பரீட்சை தாள்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம். நொச்சிக்குளம் தமிழ் வித்தியாலயங்களுக்கு மாகாண மட்ட பொதுப்பரீட்சைக்கான வினாத்தாள்கள் தனி சங்களத்தில் கிடைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (22) செவ்வாய்க்கிழமை மாகாண மட்ட பொதுப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்ட்ட நிலையில் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் 04 பாடசாலைகள் காணப்படுகின்ற போதிலும் அதில் தரம் 03-04-05ம் ஆண்டுகளுக்கு உத்தியோகபூர்வமாக இரண்டு பாடசாலைகளுக்கு தனி சிங்களத்தில் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தையும்-கல்வி திணைக்கள அதிகாரிகளையும் நம்பி வாழும் போது தமிழ் பாடசாலைகள் வடக்கு வலயத்தில் புறக்கணிக்கப்படுவதையும் கவனிப்பாரற்ற நிலையை உணர்த்துவதாகவும் இந்த பரீட்சை வினாத்தாள் சுட்டிக்காட்டுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வடக்கு கல்வி வலய தமிழ் மொழி பாடசாலைகள் நான்கு காணப்படுகின்ற போதிலும் தமிழ் மொழிப்பிரிவிற்கான அதிகாரியொருவர் நியமிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனி சிங்களத்தில் பரீட்சை தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக கோமரங்கடவெல வலயக்கல்வி பணியகத்துடன் (026-2255056) தொடர்பு கொண்டு கேட்ட போது கிழக்கு மாகாண கல்வி திணைக்களமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -