இன்று (04) மாலை கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஜாஎலக்கும் சீதுவைக்கும் இடையில் சென்று கொண்டிருக்கையில் குறித்த புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் புகையிரத்தின் நடுப்பகுதியில் சிக்குண்டதால் உடல் பலமாக சிதைவடைந்துள்ளதாக குறித்த புகையிரத்தில் சென்றவர்கள் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக புகையிரத்தில் மோதுண்டு பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பொதாதுள்ளதாக சமுக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களே தமது உயிர்களைப் பாதுககத்துக் கொள்ளும் வகையில் மிகவும் அவதானமாகச் செல்ல வேண்டும் என்பதனை அனைவரும் புரிந்திருத்தல் முக்கியமாகும்.