தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சிங்கலே ஜாதிக பலமுலுவ அறிவித்துள்ளது.
ஶ்ரீ பாதவவினை பாதுகாப்போம் என்ற தொனிபொருளில் அவ்வமைப்பு ஆரம்பித்த பாதயாத்திரை நேற்று முந்தினம் நல்லதன்னியை வந்தடைந்து அங்கு கூடாரம் அமைத்து சிங்கலே அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு இடம்பெறவுள்ள கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரும் அந்த அமைப்பு அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை செவிசாய்க்காத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.