முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் ஷரிஆவுக்கு மாற்றமாக எதுவும் நடக்கப்போவதில்லை - அமைச்சர் ஹலீம்

நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர் குலைத்து அமைதியின்மை ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகளுக்கு முஸ்லிமகள் துணை போகக் கூடாது. முஸ்லிம்கள் விவகார விகாரத்துச் சட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்றத்தில் அதற்கென குழுவை அமைத்து ஒரு ஆக்கபூர்வமான முயற்சிகள் மதி நுட்பத்துடன் மேற்கொள்ளும் தருணத்தில் தேவையற்ற விடயத்தில் ஆர்ப்பாட்டைத்தை நடத்தி தமது இயக்கத்தின் தீவிரத் தன்மையைக் காட்டி அடுத்த மதத்தவர்களின் உணர்களைத் தூண்டி வீரமாகப் பேசி பெயர் புகழ் எடுப்பதில் அர்த்தமுமில்லை. 

இதனால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூடி உள்ளதே தவிர குறையவில்லை. எதற்குமொரு அணுகுமுறை வேண்டும். எவ்வாறாயினும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் ஷரிஆவுக்கு மாற்றமாக எதுவும் நடக்கப் போவதில்லை என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட அனைத்து மஸ்ஜித் சம்மேளனங்களின் ஏற்பாட்டில் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கிடையிலான கூட்டம் மாத்தளை மண்தண்டாவளை அல் புர்கான் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாத்தளை மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் எம். எச்.ஏ.முஹ்தார் தலைமையில் 20-11-2016 நடைபெற்றது .

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்..

கல்ஹின்னையில் இடம்பெற்ற இளைஞனின் கொலைச் சம்பவம் ஆரம்பத்தில் பல சந்தேகங்களை விளை வித்தாலும் பொலிஸாரும் ஊiரைச் சேர்ந்த சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து துரித கதியில் சந்தேக நபரைகளை பிடித்துக் கைதி செய்தனர். ஒருவர் கண்டி மஹிய்யாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபரும் மற்றுமொரு நபர் பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர். பாரிளயவிலான சந்தேகம் ஒன்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. 

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக கூறிய கூற்றுக்கள் யாவும் முற்று முழுதாக நம்பக் கூடியதாக விடயங்கள் அல்ல. சில விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டுள்ளன. மத்ரஸாக்களில் சுற்றுலாவுக்காக வருகை தரும் அரபு நாட்டு அரபிகளினால் பிழை கருத்துக்கள் பரப்பப்படுவதாக சுட்டிக் காட்டி பரப்புரையாற்றியுள்ளார். ஆனால் அது உண்மையிலேயே உண்மைக்குப் புறம்பான குற்றச் சாட்டாகும். இது தொடர்பாக நான் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளேன். 

மாத்தளை மஸ்ஜிதுகளின் சம்மேளனத்தைப் பொறுத்தவரையில் சிறந்த முறையில் செயற்பட்டு வருதையிட்டு நான் பெருமையடைகின்றேன். நாம் அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று பட வேண்டும். நாங்கள் பல கூறுகளாக பிரிந்து செயற்படுவதால் பல பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இஸ்லாம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

எல்லாயின மக்களுடனும் ஒன்றிணைந்து அறிவார்ந்த ரீதியாக தூர நோக்குடன் செயற்பட்டு எமது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். நாட்டுக்குள் இனிமேலும் இனவாதம் பேசும் அனைவருக்கும் தயவு தாட்சண்யமின்றி இன மத பேதங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -