அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார விழாவின் ஓர் அங்கமாக "முஹர்ரம் சிறப்பு கவியரங்கு" நேற்று (2016.11.21) பிற்பகல் 3.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு ரி்.ஜே.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலாச்சார விழாவின் முஹர்ரம் சிறப்புக் கவியரங்கு நிகழ்ச்சியினை கலாபூசணம் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்கினார்.
கெளரவ அதிதியாக கலாநிதி டொக்டர் கே.எல்.நக்பர் அவர்களும் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுடீன், கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எம்.ஐ அஸ்ரப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நெளபிசா, ரிபாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கவியரங்கில் எம்.ஐ.எம்.ஏ.ரவூப், ஈழமதி ஜப்பார், இஸட்.எப்.றிப்னா, ஏ.எச்.நெளசாத், எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட். ஏ.ஆர்.எம்.பெளஸான் ஆகியோர் கலந்து கவிமழை பொழி்ந்தனர். கலந்துகொண்ட கலைஞர்கலுக்கு சான்றிதழும் பரிசுப்பொதியும் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.