யாழ் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் விளையாட்டு தொடர்பான பிரச்சினைக்குத் திர்வு -பி/அ ஹரீஸ்

யாழ்ப்பாண முஸ்லீம்கள் எதிர்நோக்குகின்ற விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான எச் எம் எம் ஹாரிஸ் நேற்று வியாழன்று தெரிவித்தார் .

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் இடம்பெற்ற பிரதி அமைச்சுருடனான சந்திப்பின் போது யாழ் முஸ்லீம் அமைப்பு சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி தெரிவித்தார் .

இந்த சந்திப்பின் போது புத்தளத்தில் வாழும் யாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விளையாட்டு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி மைதான புனரமைப்பு பணிகளின் அவசியம் ஆகியன குறித்து பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .
இந்த சந்திப்பின் போது யாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மீள்குடியேற்ற நெருக்கடிகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது .

யாழ்ப்பாண முஸ்லீம்களின் விளையாட்டு சாதனைகள் குறித்து பயனுள்ள ஆவண பதிவுகளை வழங்கும் மணிபல்லவத்தார் சுவடுகள் மற்றும் யாழ் முஸ்லிம்கள் பதிவுகள் ஆகிய இரு புத்தங்கள் அடங்கலாக யாழ் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்த கடிதம் ஒன்றும் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

இலங்கையில் யாழ் முஸ்லிம் பிரதி நிதிகள் இது குறித்து தன்னை வந்து சந்திக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -