மரணித்த பாடகரின் உடலை சுமந்து சென்ற ஜனாதிபதி மைத்திரி


சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வராலாற்று முதன் முறையாகும்.

குறித்த ஊர்வலத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, கயந்த கருணாதிலக உள்ளிட்ட அரச தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை, அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் மரணித்தவர் உடலை சுமந்த வரலாற்று சாதனையை ஜனாதிபதி மைத்திரி தனதாக்கி கொண்டுள்ளார் பலர் அஞ்சலி செலுத்துவது வழமை இப்படி அஞ்சலி செலுத்தியது இதுவே முதல் தடவை….
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -