வந்தாறு மூலை இலங்கை வங்கிக்கு பணமெடுக்க வந்த முதலை -ஓட்டமெடுத்த பொதுமக்கள்

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தினுள் அமைந்துள்ள வங்கி நிறுவனமொன்றின் பணமெடுக்கும் தன்னியக்க இயந்திர கட்டடத்தினுள் இன்று அதிகாலையில் முதலை ஒன்று புகுந்ததனால் பணமெடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த முதலை சுமார் 6 அடி நீளமுடையது. கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய அதிகளவான மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாவிக்கும் ஏ.டி.எம் இயந்திர பகுதியில் முதலை புகுந்தமை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குறித்த முதலை பொலிசாரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்மைக் காலமாக மட்டக்களப்பின் பல இடங்களிலும் கிராமப் பகுதிகளிலும் முதலைகள் புகுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: நாதம்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -