அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்திலுள்ள 19 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் 77 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 19 பேருக்கான நியமனத்தினை வழங்குவதாகவும் மற்றைய 56 வெற்றிடங்களை ஜனவரி மாதத்திற்குள் நிரப்ப உள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கர்ணாகரன் பிரதி செயலாளர் ஜே.ஹுஸைன்தீன் மற்றும் கிழக்கு மாகாண பிராந்திய பிரதி பணிப்பாளர் ஏ,லதாஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.