திருகோணமலை வின் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா
பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர்
திருகோணமலை வின் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா நிகழ்வு திருகோண
மலை நகராட்சி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் (2016.11.06ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் முன்பள்ளி மாணவர்களும் அதிதிகளால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களும், கௌரவ அதிதியாக திருகோணமலை பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் தவனேஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதியாக ஸாஹிரா கல்லூரியின் அதிபர் அலிசபரி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.