அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நகர் மற்றும் நிலாவௌி பகுதிகளிலுள்ள உணவகங்களின் தரத்தினத்தையும் -சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக விஷேட சுற்றிவளைப்பு இன்று (15) கிழக்கு மாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் லதாஹரன் தலைமையில் நடைபெற்றது.
நிலாவௌி பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட்டல்கள் சோதனைக்குற்படுத்தப்பட்டதுடன் திருகோணமலை நகரில் பஸ் தரிப்பிடத்தை அண்மித்த ஹோட்டல்களையும் சுற்றிவளைத்து பாவனைக்குதவாத உணவுப்பொருற்களையும் மீட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் ஒன்றினைந்து இன்றைய தினம் பாரிய சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதில் திருகோணமலை பஸ் தரிப்பிடத்திலுள்ள இரண்டு ஹோட்டல்களை மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் கடை திறப்பதாகவிருந்தால் கடைகளை சுத்தப்படுத்திய பின்னர் அக்கடைப்பகுதியை பார்வையிடுகின்ற பொது சுகாதார பரிசோதகர் .சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியைப்பெற்று ஹோட்டல்களை திறக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாலுள்ள ஹோட்டலை ஒரு வாரத்திற்கு மூடுமாறும் கடைகளின் சுத்தம் பற்றி சுகாதார வைத்திய அதிகாரி பார்வையிட்ட பின்னர் கடையை திறக்குமாறும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் லதாஹரன் தெரிவித்தார்.