அக்கரைப்பற்று பட்டினபள்ளி வாசலில் ஆரம்பமாகிய முறை கேடான அபிவிருத்திகளால் அக்கரைப்பற்றின் அபிவிருத்தி நாசமாக்கபடுகின்றமையையும் சில சில்லறை அரசியல் வியாபாரிகளால் அது துவம்சம் செய்யப்படுவதற்கும் எதிரான ஆர்ப்பாட்ட பேரணி இன்று பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் வெற்றியைடந்தது
அக்கரைப்பற்று முன்னாள் மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட்சகி, அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் அஸ்மி அப்துல் கபுர், சட்டத்தரணி பஹிஜ், சிரேஷ்ட கட்சியினுடைய உறுப்பினர்களான உவைஸ் ,கியாவுதீன்,முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் றாசிக் பிரதேச சபை உறுப்பினர் இல்யாஸ் இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து மிகுந்த ஆக்ரோசத்துக்கு மத்தியிலும் இளைஞர்கள் தமது ஊரின் தலைவரை நினைவு கூர்ந்து ஆர்ப்பாடட பேரணியில் கலந்து கொன்டனர்.
அக்கரைப்பற்றின் முறையான அபிவிருத்திக்கு எவரும் முட்டுக்கட்டை இட வேண்டாம் என ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமளிப்பினர்
பிரதி அமைச்சர் பைசல் காஷிமுக்கெதிரான சுலோகங்கங்கள் தங்கிய மக்கள் வெள்ளம் பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளித்தனர்
இறுதியில் அக்கரைப்பற்று முன்னாள் முதல்வர் இது தொடர்பில் உரை நிகழ்த்தினார்.