நாடாளுமன்ற தொகுதியின் பிரதான கட்டிடத்திற்கு முன்னால் உள்ள குளத்தில் ஹைட்பிரிட் கார் ஒன்று வீழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே பயணித்த கார் ஒன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வாகனம் அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானதென தெரியவந்துள்ளது. அதற்கமைய அது அருங்காட்சியக திணைக்களத்திற்கு சொந்தமானதென குறிப்பிடப்படுகின்றது.
கல்வி அமைச்சின் உள்ளக நடவடிக்கை, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2017ஆம் செலவுகள் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட இருளான சூழ்நிலையில் பாதை தெரியாமல் குறித்த மோட்டார் வாகனம் குளத்தில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. அங்கிருந்த சிலர் இணைந்து வாகனத்தை வெளியில் எடுப்பதற்கும் சாரதியை காப்பாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.