வெளிநாடு செல்வோருக்கு புதிய சட்டம் : ரிசானா நபீக்குக்கு ஏற்பட்ட நிலைமை இனி வேண்டாம்

வெளிநாட்டில் தொழில் செய்வதற்கு பயிற்சி பெறாத எவரும் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என என வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ரிசானா நபீசிக்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் எவருக்கும் ஏற்படக் கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகள் 643 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. சுமார் 2 கோடி 45 இலட்சம் ரூபாய் புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டது. 

தொடர்ந்து பேசிய அமைச்சர்,

இந்த நாட்டில் காலம் காலமாக புரையோடிப்போயிருந்த இனவாதம் ஜனாதிபதி மைத்திபால மற்றும் பிரதம ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -