பொத்துவில் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றித் தாருங்கள் - பிரதியமைச்சர் பைசால் காசிம்

சுலைமான் றாபி-
பொத்துவில் மக்களின் கல்வியைறிவை விருத்திசெய்ய பொத்துவில் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றித் தரவேண்டும் என சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் , கல்வி இராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (08) பொத்துவில் அல்-கலாம் பாடசாலையில் இடம்பெற்ற தொழில் நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் : 

பொத்துவில் பிரதேசத்திற்கு உதவிகள் கிடக்கும் வீதம் குறைவு. ஏனென்றால் அது ஒரு தூர பிரதேசம் என்பதற்காக அவிருத்திகள் உட்பட அனைத்து விடயங்களிலும் பொத்துவில் பிரதேசம் புறக்கணிக்கப் படுகின்றது. பிரதேச அபிவிருத்தியில் முதல் கட்டமாக பொத்துவில் பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த ஆட்சிக் காலங்களில் அதிக தடவை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போதும் எம்மால் முடியுமான உதவிகளை இந்தப் பகுதி பாடசாலைக்கு வழங்கியிருந்தோம். அன்று வழங்கிய உதவிகள் மட்டுமே இன்று வரைக்கும் காணப்படுகிறது. ஆனால் இதுவரைக்கும் எந்த அரசியல்வாதிகளாலும் இந்தப் பகுதி பாடசாலைகள் கணிசமான அளவு அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பது வேதனையாகும். 

அதேபோன்று பொத்துவில் உல்லை அல்- அக்சா பாடசாலையானது மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதிய பௌதீக வளங்கள் இல்லாத ஒரு பாடசாலையாக காணப்படுகிறது. மழை காலங்களில் மழைநீரினால் கூரைகள் மூலம் ஒழுக்கு ஏற்பட்டு மாணவர்கள் அங்கு பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். 

மேலும் இந்தப் பகுதி பாடசாலைகள் அனைத்தும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ் காணப்படுவதனால் இவ்விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முன் வரவேண்டும். 

மேலும் இந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர், கல்வியமைச்சர், ராஜாங்க அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அனைவரும் ஒன்று சேராத பட்சத்தில் பொத்துவில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதும், அதற்கு தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவதும் கனவில் கூட நடக்க முடியாததொன்றாகும். 

கடந்த ஆட்சியில் பொத்துவில் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த அன்றைய கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டுவந்த போது மாகாண சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றால் தான் அதனை உடனடியாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி தருவேன் என தன்னிடம் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அதற்கிடையில் ஆட்சி மாறிவிட்டது. இருந்தாலும் இந்த நல்லாட்சியில் மாகாண சபை ஊடாக இந்த இந்த மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த அனுமதி வழங்கப்படுமாயின் விரைவில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத்தெரிவித்தார். 

இந்த அடிக்கல் ஆண்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதியமைச்சர் பைசால் காசிம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -