இலங்கையில் இனவாதம் தூண்டும் செயற்பாடுகளுக்கு பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இனவாத செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் நாட்டில் வாழ முடியாது என அச்சுறுத்தல் விடப்பட்டு வருகின்றது.
இனவாதச் செயற்பாடுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் நாட்டை குழப்பவும், சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கும் நற்யெரை கெடுக்கவும் சில சதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று, ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்த நீலப்படையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு வேண்டப்பட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கட்டி எழுப்பப்பட்ட நல்லிணக்கத்திற்கு எந்த ஒரு அவதூறும் ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் மங்கள சமரவீர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.