தெளஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கைது

தெளஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பிரபதீப மாவத்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும் மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் குருநாகல் பிரதேச பொதுபல சேனா அமைப்பின் தேரர் ஒருவர் ஆகியோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவரது முறைப்பாட்டின் பிரதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் சட்டத்தரணி என். எம். சஹீட்டினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

டான் பிரியசாத்தின் கைது சம்பவத்தினையடுத்து நேற்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது சட்டத்தரணி சஹீட் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்து, அப்துல் ராசிக்கையும் கைது செய்யுமாறு அசாத் சாலி சார்பில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சற்று முன்னர் அசாத் சாலியின் முறைப்பாட்டுக்கு இணங்க அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டுள்ளார்.  பெரும்பாலும் அவர் பிணையில் விடுவிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -