ஷரீஆ சட்­டத்தை ரத்­துச்­செய்ய நீதியமைச்சரிடம் கோரிக்கை - சிங்­கள ராவய

லங்­கையில் முஸ்­லிம்­களின் ஷரீஆ சட்­டத்தை உட­ன­டி­யாக ரத்­துச்­செய்து முஸ்லிம் விவ­கா­ரங்­களை நாட்டின் பொதுச் சட்­டத்­தினுள் உள்­வாங்­கு­மாறு பெளத்த சங்க சபை நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார். 

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவை நேரில் சந்­தித்து இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

நாட்டில் எத்­தனை பிரிவு மக்கள் இருந்­தாலும் அனை­வ­ருக்கும் ஒரே சட்­டமே அமு­லி­லி­ருக்க வேண்டும். இன­ரீ­தி­யான, மத­ரீ­தி­யி­லான சட்­டங்கள் நடை­மு­றையில் உள்­ள­த­னாலே பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்கள் ஏற்­பா­டு­கின்­றன என்­பதை அமைச்­ச­ரிடம் விளக்­கி­யி­ருக்­கிறோம். 

அத்­தோடு முஸ்­லிம்கள் எமது வர­லாற்றுப் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களால் கூர­கல, முகுது மகா விகாரை, தெவன கல போன்ற பிர­தே­சங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பிர­தே­சங்­களை மீட்டு பெளத்­தர்­க­ளுக்கே வழங்­கப்­ப­ட­வேண்டும்.

பெளத்­தர்கள் இஸ்­லா­மி­யர்­க­ளாக மதம் மாற்­றப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­துள்ளோம். 

ஐ.எஸ்.தீவி­ர­வா­திகள் இலங்­கையைத் தள­மாகக் கொள்­வ­தற்கு இடமளிக்கக் கூடாதெனவும், ஐ.எஸ்.உடன் தொடர்புபட்டுள்ள இஸ்லாமியர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டியுள்ளோம் என்றார்.jm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -