மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து அதிகளவான பெண்கள் செல்கின்ற நிலையில் அங்கு பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் அண்மைய நாட்களாக சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்படுகின்றன.
குறிப்பாக சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒலேய்யா முகாம் தொடர்பில் அண்மைய நாட்களில் அதிகளவாக பேசப்படுகின்றது.
குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து சமூக வலைதளங்களில் குரல் பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் முகாம் தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் தமிழ் மற்றும் முஸ்லீம் பெண்கள் உள்ளிட்ட பலர் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.