கவுதமியைத் தொடர்ந்து, குஷ்பு...!

திமுகவில் இருந்து விரட்டப்பட இருந்த நேரத்தில் தானாக விலகிய குஷ்பூ தற்போது காங்கிரசில் உள்ளார். திமுகவில் இருந்தபோது, மு.க.ஸ்டாலினை தேவையில்லாமல் விமர்சித்து வீடு தாக்கப்பட காரணமாகி இருந்தார்.

தற்போது காங்கிரசில் இருந்தாலும் நாத்திகம் பேசி வருவதோடு காங்கிரசின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராகவும் பேசியுள்ளார். முஸ்லீம்களின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக காங்கிரசார் மேலிடத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் காங்கிரசில் இருந்து விலகவும் நேரலாம் என கூறப்படுகிறது. நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவள் என ஏற்கனவே குஷ்பூ கூறியிருந்தார்.

இதனிடையே குஷ்புவின் கருத்தை பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டியுள்ளதால், அவர் பா.ஜ.கவிற்கு போகத்தான் வாய்ப்பு அதிகம் என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நடிகை கவுதமி பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளதால், அவருடைய பெயருடன் சேர்த்து இப்போது குஷ்புவின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -