க.கிஷாந்தன்-
ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் பாலம் ஒன்று 22.11.2016 அன்று மதியம் உடைந்து விழுந்துள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் அரைவாசி பகுதி இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க கூடியதாகவுள்ளது.
மேலும் அவ்வீதியினூடாக அக்கரப்பத்தனை மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து போடைஸ் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்வீதியினூடாக பாரவூர்த்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பாலம் உடைந்துள்ளதால் பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.