அமைச்சர் ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த அமைச்சில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதிக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சருக்கு ஜனாதிபதி அண்மையில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல், நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், விலை மனுக் கோரல்கள் இன்றி மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.