இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் மறுப்பு.!

கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள - முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும்,சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள், நேற்று (23.11.216)இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில், ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும், இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். இல் உள்ளார்கள் என வெளியிடப்பட்ட கருத்து எவ்வித ஆதரமுமற்றதாகும் என்றும், பொறுப்போடும் உறுதியோடும் கூறியதோடு, வெளிநாடுகளில் இருந்துவரும் முஸ்லிம் விரிவுரையாளர்கள் எவ்வித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் வற்புறுத்தி பகிரங்கமாகக் கூறியதற்கும் அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பதட்டத்தை நீக்கியதற்கும் முஸ்லிம் சமூகம் சார்பாக எங்களுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.சுபைர்தீன்,
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -