பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது பொலிஸ் தின விழா கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வான பொலிசாரின் இசை நிகழ்சி 01-11-2016 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொடஆராச்சி,மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக் உட்பட இலங்கை பொலிஸ் படை, பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள்,பொது மக்கள் ,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மங்கள விளக்கேற்றி இசை நிகழ்சியை ஆரம்பித்து வைத்தார்.
இதில் பொலிஸ் இசை குழுவின் தமிழ்,சிங்கள,ஹிந்தி ஆகிய பாடல்களுடன் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இங்கு இசையுடன் கூடிய இசை நடன நிகழ்வும் மேடையில் அரங்கேற்றப்பட்டது.
இசை நிகழ்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மழை பெய்திருந்த நிலையிலும் இசை நிகழ்சி சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.