கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.ஜே.எம்.லாகீரின் 17.12.2015 திகதிய Epc/MPC/JML/12 /12/TRI-11 எனும் இலக்க எழுத்து மூல வேண்டு கோளிற்கிணங்க கௌரவ கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் A.L.M.நஸீர் அவர்களினால் ௦4/௦5/2016 ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் தீர்மானப்படி கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்திற்கு சமர்ப்பிக்கபட்ட அமைச்சரவை பத்திரத்தினை ஏற்று மூதூர் ஷாபி நகரில் மத்திய மருந்தகம் ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரிய சிபார்சுகள் வழங்கியது பிரதம செயலாளர் 29.06.2016 திகதிய கடிதத்தின் பிரகாரம்.
இதனை தொடர்ந்து மாகாண சுகாதார செயலாளர் அவர்கள் திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் அறிக்கையைப் பெற்று மத்திய சுகாதார அமைச்சின் அனுமதி பெறுவதற்கு சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே மூதூர் ஷாபி நகர் மத்திய மருந்தகம் அமைப்பது மிக நீண்ட கால மக்கள் தேவையை கருத்தில் கொண்டு கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் Z.A.நசீர் அஹமட் , கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் A.L.M.நஸீர் ,கிழக்கு மாகாண அமைச்சரவை வாரிய அமைச்சர்களுக்கும் , மற்றும் பிரதம செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.ஜே.எம்.லாகீர் மூதூர் மக்கள் சார்பாக மனதார ,நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -