தொலைக்காட்சி அரச விருது நிகழ்வில் தேசிய விருது பெற்ற கலைஞர்கள்..!

அஷ்ரப் ஏ சமத்-
2016 தொலைக்காட்சி அரச விருது விழா கொழும்பு நெலும்பொக்குன கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. தொலைக்காட்சி ஆக்கத்துறையின் தரத்தை மேம்படுத்தி இத்துறையைச்சார்த படைப்பாளர்களை அரச மட்டத்தில் பாராட்டும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்த விருது விழாவை வருடாந்தம் நடத்திவருகிறது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும ,பிரபல தொலைக்காட்சி திரை வசன எழுத்தாளர் சோமவீர சேனாநாயக்க, பிரபல நாடகக் கலைஞர் ஐராங்கனி சேரசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

கடந்த வருடம் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் ஒளிபரப்பான 40 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த படைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 76 பேர் இங்கு விருது வழங்கிக் கௌரவிக்கபட்டனர்.

இந்த நிகழ்வில் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்டார். வசந்தம் தொலைக்காட்சியில் அஸ்மின் தயாரிக்கும் 'தூவானம்' கலை -இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி 2015 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சியாக தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஏலவே இரு முறை சிறந்த சஞ்சிகைக்கான தேசிய விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கல் நிகழ்வில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதிபதியின் இலங்கை நண்பராக நடித்த அரவிந்தன் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'நீ நான் பேய் 'நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த தாலைக்காட்சி நாடக நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'பவித்ரா' நாடகத்தில் பவித்ரா என்ற பாத்திரத்தில் நடித்த காயத்ரி சண்முகநாதன் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருதினையும் அதே நாடகத்தில் நடித்த குகன்யா குகமோகன் சிறந்த துணை நாடக நடிகைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டனர். 

அதே போன்று நேத்ரா தொலைக்காட்சியில் அரசியல் தமிழ் நிகழ்ச்சியை நடாத்திவரும் செய்திப்பிரிவின் பிரதிப் பணிப்பாளா் யு.யாக்கூபின் சிறந்த அரசியல் நிகழ்ச்சி விருதினை பெற்றுக் கொண்டாா்.

வசந்தம் தொலைக்காட்சியின் பல்வேறு கலை, அரசியல், சமுக நிகழ்ச்சிகளின் நேர்கானும் முசாரப், இம்முறை அரச விருதினை பெற்றுக் கொண்டாா். அதே போன்று சக்தி தொலைக்காட்சியின் சிரேஸ்ட தயாரிப்பாளா் சியா உல் ஹசன் , வர்ணம் தொலைக்காட்சியின் முகாமையாளா் ஹிஷாம், உதவி தயாரிப்பாளா் வவிதா லோகநாதன் ஆகியோறும் இவ் ஆண்டின் அரச தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றுள்ளனா்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -