பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவினுள் கஞ்சா செடியை வளர்த்து வந்த ஒருவரை பொலிஸார் நேற்று(18) இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸ் உப பரிசோதகர்களான சிறிகஜன் ,எஸ்.சொருபன்,ஜயேஸ் ஆகிய மூவரும் குறித்த வீட்டிற்கு சென்று சந்தேக நபரை கைது செய்ததுடன் கஞ்சா செடிகளையும் கைப்பற்றினர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 2ஆம் குறுக்குத்தெரு மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள மாயகிருஷ்ணன் ராஜேந்திரன்(வயது 32) என்பவராவார்.
சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் மூன்றும் 23- சென்ரி மீற்றர் 16 -சென்ரிமீற்றர் 18- சென்ரிமீற்றர் உயரத்தில் வளர்க்கப்பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.