கொழும்பு ஹென்றி பேதிரிஸ் மைதானம் இசிப்பதான கல்லூரிக்கு கையளிப்பு..!

கொழும்பு மாநகரசபையின் கீழ் இருந்து வந்த கொழும்பு 5 ஹென்றி பேதிரிஸ் மைதானத்தினை இசிப்பதான கல்லூரிக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பையிஸர் முஸ்தபா, விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்களும், கொழும்பு நகர ஆணையாளர் வீ.கே. அனுர, மாநகரசபை ஊழியர்கள், இசிப்பதான கல்லூரியின் அதிபர் பிரேமசிறி ஏபா மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இசிப்பதான கல்லூரியின் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் வேண்டிக்கொண்டதை அடுத்து, பிரதமரின் ஆலோசனையில் ஹென்றி பேதிரிஸ் மைதானத்தை இசிப்பதான கல்லூரிக்கு வழங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளோராட்சி அமைச்சர் பையிஸர் முஸ்தபா நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதன் போது கருத்து தெரிவித்த அதிபர் 64 வருட கால வரலாற்றைக்கொண்ட இக்கல்லூரிக்கு மைதானம் ஒன்று கிடைத்திருப்பது வரலாற்று நிகழ்வு என தெரிவித்தார்.

இதனடிப்பையில் இவ்வளவு காலமாக கொலும்பு மாநகசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய ஹென்றி பேதிரிஸ் மைதானத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஒப்பந்த அடிப்படையில் இரு தரப்பினருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கல்லூரியில் 5000 மாணவர்கள் கற்பதாக அதிபர் சுட்டிக்காட்டியதுடன் இதுவரைகாலமும் விளையாட்டு நடவடிக்கைகள் வாடகைக்கு பெற்றுக்கொண்ட மைதானங்களிலேயே முன்னெடுக்கப்பட்டது, இலங்கை றக்பி அணியின் 50 %வீரர்கள் தெரிவானது இசிப்பதான கால்லூரியிலிருந்து என அதிபர் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -