அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அமைச்சர் பையிஸர் முஸ்தபாவிடம் விசேட மனு.!

ற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மன்றம் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (திருத்த) சட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட தங்களுக்கு நேரம் ஒதுக்கி தரப்பட வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (23 ) முன்னெடுத்தது.

இதனையடுத்து மாகாணசபைகள் மற்றும் உள்ளோராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து பேசினர். இதன் பொது மன்றத்தின் தலைவரால் பத்து விடயங்கள் உள்ளடக்கப்பட்ட மனுவொன்று கையளிக்கப்பட்ட இது தொடர்பில் பாராளுமன்ற உப குழுவோடு கலந்துரையாட வேண்டும் எனவும் அதட்கான நேரம் ஒதுக்கித்தரப்பட வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டனர்.

வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பாராளுமன்ற உப குழுவோடு பேச அழைத்துள்ளார். இதன் போது உரையாற்றிய அமைச்சர், தேர்தலை நிறுத்தி வைப்பதட்கான எந்தத்தேவையும் எங்களுக்கு இல்லை, எல்லை நிர்ணயம் நிறைவு பெற்றவுடன் நிச்சயமாக தேர்தல் நடாத்தப்படும், நாட்டின் முன்னேற்றம் கருதி பெரும்பான்மையாக இருந்தாலும் சிறுபான்மையாக இருந்தாலும் யாரொருவருக்கும் அநியாயம் இழைக்கப்படாத முறையில் தேர்தல் நடாத்தப்படும் என தெரிவித்தார்.

குறித்த மனுவில் உள்ளூராட்சி வேட்பாளர்களின் கட்டுப்பணம் (இதற்கு முன் நடைமுறையில் இருக்கவில்லை) முன்வைக்கப்பட்ட ஐந்து வீத பெறுமானம் (இதற்கு முன் நடைமுறையில் இருக்கவில்லை) மேலதிக வேட்பாளர்கள் (இதற்கு முன் நடைமுறையில் இருக்கவில்லை) உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் நடவடிக்கைகள். தபால் வாக்களிப்பில் போது இரகசியத்தன்மை பாதுகாக்கப்படல். இளைஞர் மற்றும் பெண் உறுப்புரிமை. இடைத்தேர்தல். மேலதிக தேர்தல் தொகுதிகள். வேட்பாளர்கள் தொகுதி (வட்டாரத்தினுள்) வசிப்பவராக இருப்பது அவசியம். அரச அதிகாரிங்கள் சபைக்குள்ளாகவே வசிப்பவராக இருந்து தேர்தலுக்கு முகம் கோலடித்தல் என பத்து விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -