தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணி பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் 18/11/2016 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை) வரை வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் இளைஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் முகாமில் நடைபெற்ற தீப்பாசறை நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்
சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன், சமனங்குளம் கிராம சேவையாளர் திரு மா.சுரேந்தர், நெடுங்கேணி பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர் திரு இ.சஜீவன் ஆகியோருடன் வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீப்பாசறை நிகழ்வுகளை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன் தலைமையேற்று நடாத்தியதுடன், உப தலைவர்களில் ஒருவரான திரு க.மயூரதன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், மற்றும் உறுப்பினர் ஜெ.கஜுரன் ஆகியோர் ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.