தற்போது மூதூர் பிரதேச செயலகத்தின் உப அலுவலகமாக இயங்கி வரும் தோப்பூர் அலுவலத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது குறித்து கவனத்திற்கெடுப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடந்த வெள்ளிக்கிழமை தோப்பூர் பிரதேச செயலகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அமைச்சரிடம் வாய்மொழி மூல வினாத் தொடுத்திருந்தார். அதன்போது பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தோப்பூர் உப செயலகத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் உதவி பிரதேச செயலாளர் பணி புரிகின்றார். இவருக்குத் தேவையான ஆளணி அங்குள்ளது. இவர்கள் மூலம் மக்கள் தமக்குத் தேவையான சேவைகளை அங்கு பெற்றுக்கொள்கின்றனர். இதனை விட பொதுமக்களது ஏனைய கோரிக்கைகளை மூதூர் பிரதேச செயலகத்திற்கு அனுப்பி அதற்கு தீர்வு பெற்றறுக்கொடுக்கும் ஒருங்கிணைப்புப் பணிகளும் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த உப அலுவலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக திருகோணமலை அரசாங்க அதிபரிடமிருந்து முழு அறிக்கை கோரப்படும். அதனைப் பரிசீலித்த பின் தரமுயர்த்துவது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
கடந்த 9 வருடங்களாக உப பிரதேச செயலகமாகச் செயற்;பட்டு வரும் தோப்பூர் உப அலுவலகத்தினால் முன்னேடுக்கப்படும் சேவைகள் குறித்தும் அதனை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது குறித்தும் இம்ரான் எம். புp வினாத்தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.