நேற்று இரவு சாய்ந்தமருது கடற்கரை திடலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்து இடம்பெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்:
இன்று முகநூல்களில் சில கைக்கூலிகள் பொய்யாக என்னமோ எல்லாம் எழுதி நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நினைப்பில் அவர்கள் பெரும் வேலை செய்கிறோம் என்றிருக்கலாம் ஆனால் சிலதேவைக்காகவும் சில்லரைக்காகவும் காக்காப் பிடிக்கும் இந்த கேவலமான வேலையால் யாருக்கும் எதுவும் குறைந்து விடப்போவதுமில்லை. எனக்கும் பேஸ்புக் இருக்கிறது ஆனால் நான் எனது நல்ல வேலையை மட்டும் அதில் பதிவிடுவேன் மாறாக தேவையில்லாமல் நான் எதுவும் எழுத விரும்புவதில்லை.
இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரை சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஹக்கீம் தலைவராக இருந்தால் அவர்களின் பருப்பு வேகாது என்ற அச்சத்தில் தலைவரை மாற்றுங்கள் என்ற கோசத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்சிக்கு சரியான தலைமை பாராளுமன்றில் உரத்துக் குரல் கொடுக்கும் தலைமை என்றால் அது இந்த ஹக்கீமே தவிர வேறுயாருமல்ல. இவர்தான் இலங்கை முஸ்லீம்களின் தேசியத் தலைவர் இவரைப் பிடிக்காதவர்கள் இக்கட்சியில் இருந்து விலகிச் செல்லுங்கள் இக்கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் கட்சி திறம்பட செயல்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சேவைகளைச் செய்து வருகிறது அதன் பங்காளர்களாக அனைவரும் இணைந்து மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட முன்வாருங்கள் என்று தனதுரையில் அழைப்பு விடுத்தார்.