வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் நீக்கம்? கட்சி தலைமை மௌனம்?

பாறுக் ஷிஹான்-

டமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அப்பதவியை கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

எனினும் இந்தச் செய்தி குறித்து உறுதிப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புக்கொண்ட போதிலும் அது கைகூடவில்லை.

அத்துடன் சம்பந்தப்பட்ட வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவும் இவ்விடயம் குறித்து இது வரை எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

ஆனால் அண்மைக்காலமாக ஈபிடிபி கட்சி நிர்வாகத்தினருக்கும் எதிர்கட்சி தலைவரான சின்னத்துரை தவராசாவிற்கும் இடையே பனிப்போர் ஒன்று இடம்பெறுவதாக சமீப காலங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமிருந்தன.

எனினும் ஈபிடிபி கட்சி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர் மாநாட்டில் அதை இன்றும் சரிவர தெளிவுபடுத்த வில்லை.

கடந்த 2013 ஆண்டு வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலாவது எதிர்கட்சி உறுப்பினராக ஈபிடிபி கட்சியை சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன்(கமல்) தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதே கட்சியை சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் றெக்ஸியன் என்பவரை சுட்டுக்கொன்றமையினால் அதில் நீதிமன்றத்தினால் சந்தேக நபராக இனங்காணப்பட்டார்.

இதனால் அவரது கட்சியான ஈபிடிபி தேர்தலில் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு அனுப்பிய கடிதத்தின அடிப்படையில் கட்சியில் இருந்தும் எதிர்கட்சி பதவியில் இருந்தும் கந்தசாமி கமல் அகற்றப்பட்டதை யாவரும் அறிந்த விடயமே.

அதன் பின்னர் சின்னத்துரை தவராசா எதிர்கட்சி தலைவராக வடக்கு மாகாண சபையில் இன்று வரை சிறப்பாக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -