எப்.முபாரக்-
கந்தளாய் பொலிஸ் பிரிவினால் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலையான கந்தளாய் விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (18) வித்தியாலய அதிபர் எம்.கணேசமூர்த்தி தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா,மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அதிகாரி, உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், பாடசாலைக்கான தளபாடங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.