அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் லத்தீன் இன மக்களை துன்புறுத்துவதை நிறுத்தும்படி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிட்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், ஹிஸ்பானிக், கருப்பின மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக சமீப காலமாக பெருகிவரும் துன்புறுத்தல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை கேள்விபடும் போது மிகவும் கவலையாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்பாடுகளை நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். இத்தகைய செயல்கள் கொடூரமானது. நான் இந்த நாட்டை ஒன்றிணைக்கப் போகிறேன். என்னைப்பற்றி சரியாக தெரியாத சில பிரிவினர் என்னைக் கண்டு அச்சப்படுகின்றனர். அதனால் எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.