தற்பொழுது நாட்டில் எற்பட்டுள்ள பருவப்பெயர்ச்சி மழை வெள்ளத்தில் இருந்து மக்களை முன் கூட்டிய காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட எல்லை கிராமாமான மாஞ்சோலை கிராமத்தில் உள்ள எல்லை வீதியில் தூர்ந்து போய் காணப்படும் வாய்க்கால்கள் மற்றும் வடிகான்களை செப்பனிட்டு அகல ஆழப்படுத்தும் பணிகள் இன்று 19.11.2016 சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த பணிகள் அனைத்தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் அல்-ஹாஜ்.எச்.எம்.எம் றியாழின் துரித நடவடிக்கையின் காரணமாக இடம் பெற்று வருகின்றமை முக்கிய விடயமாகும்
மேலும் வாழைச்சேனை, பிறைன்துரைசேனை அசன்பாவா வீதியின் வடிகான் மூடிகளை அகற்றி துப்பரவு செய்யும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டதுடன் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் பசீர், மற்றும் முக்கியஸ்தர்களின் மேற்பார்வைகளில் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றன.