மியன்மார் முஸ்லிம்களுக்காக பிராத்திப்போமாக - சட்டத்தரணி லாகீர்

எப்.முபாரக்-
மியன்மார் ரோகின்கிய முஸ்லிம்களுக்காக இலங்கையில் உள்ள முஸ்லிம்களாகிய நாங்கள் ஐவேளை தொழுகையிலும் பிரார்த்திப்போதொடு ,ஜும்மா தினங்களில் விசேட பிரசங்கங்களை நடத்தி எம்மக்களை பாதுகாக்க இரு கையேந்தி பிரார்த்திப்போமாக என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் கேட்டுள்ளார்.

ஒக்டோபர் 10 ம் திகதி காலப் பகுதியில் மியன்மாரின் ரக்ஹீன் மாநிலத்தில் 09 பொலிசார் கொல்லப்பட்ட பின்னணியில் அங்குள்ள ரோகின்கிய முஸ்லிம்களை சட்ட ரீதியற்ற முறையில் கைது செய்து சித்திரவதை செய்து நீதிக்கு புறம்பான வகையில் கொல்லப்படுவது ஒரு இனத்திற்கு எதிராக கட்டவில்கப்பட்ட குரோத செயலாகும்.

மியன்மார் இராணுவத்தால் செய்யப்படும் கொடுமைகள் சொத்துக்களை தீ வைத்தும், கொள்ளையடிப்பதோடு நின்றுவிடாமல் தற்போது முஸ்லிம் பெண்களின் கற்பை சூரையாடுவதுடன் , சிறுவர்களையும், இளைஞர்களையும் வயோதிபர்களையும்,சித்திரவதை செய்து கொலை செய்தும் வருகின்றமை இந்த உலகமே கண் மூடி இருக்கின்றமை கவலை அளிக்கின்றது.

மியன்மார் ராணுவம் ரோகின்கிய கிராமங்களை புயல் போல் தாக்கியதோடு ,தற்போது பெண் பிள்ளைகளையும் தங்களிடம் ஒப்படைக்கும் படியும் மிரட்டியும் வருகின்றது.முஸ்லிம் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடுரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் முகாம்களுக்கு அருகில் காணப்பட்ட பல சம்பவங்ககள் நடந்தேறியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அரசாங்கத்தினலே திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது மிக முக்கியமானதாகும்.

அகரன் மாநிலத்தில் சுமார் 01 மில்லியன் ரோகின்கியர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளார்கள். இவர்கள் 1982 களில் மியன்மார் அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் இவர்கள் பங்களாதேசிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று காரணம் காட்டி குடியுரிமை மறுக்கப்பட்டவர்களாவார். ஐ.நா.சபை இவர்களை ‘’உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர்’’ என்று வகைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 24ம் திகதி மவ்டங் என்ற பகுதியில் சோதனை செய்த இராணுவம் 07 பெண்களை கற்பழித்துள்ளார்கள். இதில் ஒரு பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு பலியாகி யுள்ளார். அவருக்கு 19 வயது தனது உறவினர்கள் வீட்டில் இருக்கும் போதே இராணுவத்தைச் சேர்ந்த 10 பேர்கள் பலவந்தமாக கூட்டு கற்பழிப்பு செய்துள்ளார்கள். ரத்தம் சொட்டி மயங்கிய நிலையில் இருந்து அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தும் இராணுவம் அனைத்து தெருக்களையும் மூடியுள் ளதால் 02 நாட்களாக எவ்வித சிகிச்சையும் இன்றி உயிருக்கு போராடி ஒக்டோபர் 26 ம் திகதி பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறி வருகின்ற போது எங்கே சென்றது மனித உரிமை , எங்கே சென்றது சிறுவர் பாதுகாப்பு மையம், எங்கே சென்றது உலக சமாதான குழு, எங்கே சென்றது ஐ.நா சபை என்ற கேள்வி என்னக்குள் எழுகின்றது. 

இவர்களுக்காக முஸ்லிம்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஐவேளை தொழுகையிலும் பிரார்த்திப்போதொடு,ஜும்மா தினங்களில் விசேட கொத்துபா பிரசங்கங்களை நடத்தி எம்மக்களை பாதுகாக்க இரு கையேந்தி பிரார்த்திப்போமாக,எனக்கேட்டுள்ளார்.

அல்ஹாஜ்.ஜே.எம்.லாகீர் சட்டத்தரணி,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
திருகோணமலை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -