குருநாகல் பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த உபபொலிஸ் பரிசோதகர் கடந்த 15ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதன்போது தப்பிச்சென்ற மற்றைய சந்தேகநபர் வயது (36) தொடர்பிலான அடையாள அட்டை பிரதிகளை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இரண்டு அடையாள அட்டைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் ஒரு அட்டையில் கொட்டாவ என்றும் மற்றைய அட்டையில் பன்னிப்பிட்டிய என்றும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு தகுந்த பணம் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.