அபு அலா -
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் கொடுப்பதாக இருந்தால் கல்முனைக்கு இன்மொரு கல்வி வலயம் தரவேண்டும் என்று தமிழ் தரப்பினர் கோருகின்றது என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
பொத்துவில் அல் இர்பான் மகளீர் கல்லூரியில் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடத்தை நேற்று (08) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தரப்பினர் விரும்பாதவரை பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ஒருபோதும் கிடைக்கவே கிடைக்காது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களை தமிழ் கூட்டமைப்பினர் தரவேண்டும். இன்று முஸ்லிம், தமிழ் மக்களுக்குள் இரிக்கின்ற நல்ல உறவுகளை சீர் குழைக்கும் முயற்சியில் ஒரு குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் சதி முயற்சிகளுக்கு நாம் ஆளாகாமல் எமது சிறுபான்மை சமுகங்களுக்குள் உள்ள நல்ல உறவுகளை பேணி பாதுகாத்து வரவேண்டும்.
எமது சிறுபான்மை சமுகங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரைக்கு எமது சமூகங்களுக்கு கிடைக்கவேண்டிய சகல அதிகாரங்களும் கிடைக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை. பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் கொண்டு வரும் முயற்சிக்கு சகல ஒத்துழைப்புக்களையும் தமிழ் கூட்டமைப்பினர் தரவேண்டும் என்றார்.